1.
நற்கனி தேடிடும் நல்லாண்டவா
நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும் – நற்கனி
2.
மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
தப்பாது கனிதர அருள் தந்திடும் – நற்கனி
3.
உம்பணி செய்திட கனி கொடுக்க
எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும் – நற்கனி
4.
தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
தியானித்து உம்மோடு உறவாடவே
திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும் – நற்கனி
5.
என்னை நான் படைத்திட்டேன் பலிபடத்தில்
ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும் – நற்கனி
1.
narkani thedidum nallandava
nanoru bazhmaram ennaib parum
vazh nalai vanalayk kazhiththiddene
varunththum ippaviyaik kannokkidum – narkani
2.
meyyana thiradsais sedi iyesuve
kodiyaka inainththidta ennaib parum
eppothum ummil nan nilaiththirukka
dhabbathu kanidhara arul dhanththidum – narkani
3.
umpani seythita kani kodukka
emmai neer azhaiththittir therinththu kondir
um vakkai ennil neer niraivetrridum
um sithdham niraivetrri udhaviseyyum – narkani
4.
thinanththorum vedhaththai virumbitave
thiyaniththu ummodu uravatave
thiralaka umakkondru kanikodukka
thinanththorum ennai neer suthdham seyyum – narkani
5.
ennai nan padaiththidden palipataththil
eerru nar eduththandu vazhi nadaththum
iruthiyil ummukam dharisikkave
eezaiyam enakku neer arul dhanththidum – narkani